
அடுத்த முதல்வரை அஜித் தான் தேர்ந்தெடுப்பார் என பிரபல ஜோதிடர் அஷிக் ஜி என்பவர் தெரிவித்து உள்ளார்
அஜித் அரசியலுக்கு வருவாரா வர மாட்டாரா என்ற கேள்வி எப்போதுமே இருக்கும்.
சமீபத்தில் நடிகர் ரஜினி,கமல் மற்றும் விஷால் உள்ளிட்டோர் அரசியலில் குதித்தனர்.ஆனால் அஜித் வருவாரா என்ற எண்ணம் பல பேருக்கு உள்ளது.அதே வேலையில் மற்ற நடிகர்களின் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள் அதிகம் என்று கூறும் அளவிற்கு மக்கள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்து உள்ளவர் அஜித்.
காரணம், யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்றால்,யாருக்கும் தெரியாமல் உதவி செய்து வருபவர்தான் அஜித்.
இந்நாள் வரை எந்த ஒரு நெகடிவ் டாக் இல்லாத ஒரு நபர் என்றால் அது அஜித் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இப்படி பட்ட சூழலில்,தமிழகத்தை அடுத்து ஆள போகும் முதல்வர் யாராக இருக்கலாம் என்ற சூழல் நிலவும் போது, அதில் பெரும்பான்மையான பங்கு நடிகர் அஜித்க்கு உண்டு என்று கூறி உள்ளார் ஜோதிடர் அசோக்ஜி
காரணம்,ரஜினி கமல் அரசியலில் குதித்து விட்டதால்,யாருக்கு ஆதரவு என வரும் போது அஜித் ரசிகர்களின் பங்கு பெரிய அளவில் இருக்கும். அவருடைய முடிவை பொருத்து முதல்வர் நாற்காலியில் யார் அமர போகிறார் என்பதை உணரும் நேரம் வரும் என ஜோதிடர் அசோக் ஜி தெரிவித்துள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.