ரஜினி - பா.இரஞ்சித் இணையும் 2-வது படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

 
Published : May 06, 2017, 10:35 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
ரஜினி - பா.இரஞ்சித் இணையும் 2-வது படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

சுருக்கம்

Who is the music composer of Rajini - P.Ranjiths 2nd film?

ரஜினி - பா.இரஞ்சித் இணைய இருக்கும் இரண்டாவது படத்தின் இசையமைப்பாளர் யார்? என்று தகவல் சினிமா வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளன.

கோச்சடையான், லிங்கா போன்ற படங்களால் படுதோல்வி கண்டார் சூப்பர் ஸ்டார்.

பின்னர், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் செம்ம ஹிட் கொடுத்தது. அதனால் மகிழ்ச்சியடைந்த ரஜினி, தனது அடுத்தப் படத்தை ரஞ்சித்துடன் இயக்க முடிவெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த படத்திற்கான கதையை தயார் செய்யும் வேலைகளில் பா.இரஞ்சித் இறங்கினார்.

தற்போது தனது படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை பா.இரஞ்சித் மேற்கொண்டுள்ளார்.

ரஜினி தவிர்த்து படத்தில் நடிக்க உள்ள மற்ற கலைஞர்கள் குறித்து வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் கபாலி படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் என்பது தெரிந்துள்ளது. இந்த தகவலை சந்தோஷ் நாராயணனின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

கபாலி படத்தில் சந்தோஷ் நாராயணனின் இசையும், பிண்ணனி இசையும் பெரிதும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!