
பிக்பாஸ் வின்னர் யார் என்கிற கேள்வியும், அதற்கான பதிலும் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகியோர் தான் அதிக வாக்குகள் பெற்றுள்ளதாகவும் எனவே, இவர்கள் இருவரில் ஒருவர் வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில். முகேன் தான் வெற்றி கோப்பையை வெல்வார் என சில நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறி வருகிறது.
எனினும், இன்னும் ஒரு சில மணி நேரத்தில்... யார் பிக்பாஸ் நிகழ்ச்சியில், தமிழ் மக்களின் நன்மதிப்போடு அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் டைட்டல் வெல்வார் என்பது தெரிந்துவிடும்.
அதற்கான ஏற்பாடுகள் இப்போது ஆரவாரத்தோடு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் வின்னர் யார் என்பதன் அறிவிப்பு வரும் முன்னரே... பிரபல தயாரிப்பாளர் மற்றும் சினிமா பிரபலம், ஜே.எஸ்.கே.கோபி தன் டுவிட்டர் பக்கத்தில் முகென் தான் வின்னர் என அறிவித்துள்ளார். இதுவரை எந்த ஒரு பிரபலமும் பிக்பாஸ் வின்னர் யார் என்று தெரியப்படுத்தாத நிலையில் முதல் முறையாக பிக்பாஸ் பிரபலம் யார் என இவர் அறிவித்துள்ளதை முகேன் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.