பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்...! காரணம் என்ன..? வெளியில் கசிந்த உண்மை தகவல்..!

Published : Oct 06, 2019, 03:02 PM IST
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்...! காரணம் என்ன..? வெளியில் கசிந்த உண்மை தகவல்..!

சுருக்கம்

இன்றைய தினம் பிக்பாஸ் பைனல் நடைபெற உள்ளது. எனவே நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள, மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே, சாண்டி, லாஸ்லியா ஆகியோரின் பெயர் வெற்றியாளர்கள் பட்டியலில் அதிகம் அடிப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில் மலேசிய பாப் பாடகர் முகேன் ராவ் தான் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  

மேலும் சமூக வலைத்தளங்களிலும் நிறைய மக்கள் முகேனுக்கே தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். ஒரு பக்கம் முகேனுக்கு, ஆதரவு அதிகமாக இருந்தாலும், மற்றொரு தரப்பினர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகேனின் பங்கு மிகவும் குறைவாகவே இருந்ததாக கருத்து கூறி வருகிறார்கள்.

அபிராமி, முகேனை காதலித்ததாக கூறியதால்  அவர் பின்தங்கியதாக முதலில் கூறப்பட்டாலும், உண்மையில் அபிராமியின் காதல் சர்ச்சை வந்ததால் தான், முகேனின் உண்மை முகம் அனைவருக்கும் தெரிய வந்தது.

 மேலும் பெண் போட்டியாளர் ஒருவர் தன்னை சுத்தி சுத்தி வந்த போதிலும், வெளியே உள்ள காதலிக்காக தற்போது வரை உண்மையாக இருந்து வருவதே அவரின் இந்த வெற்றிக்கு காரணம் என்பதை ரசிகர்கள் பலர் பரவலாக தெரிவித்து வருகிறார்கள்.

சரியாக இன்று 6 மணிக்கு துவங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில்... இன்று வெற்றி கோப்பையை கையில் ஏந்த போவது யார் என்பது தெரிந்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை. அது வரை காத்திருப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!