16 போட்டியாளர்களில் "இவருக்கு தான்" அமோக ஆதரவு..! தெரியுமா உங்களுக்கு..?

Published : Jun 27, 2019, 02:06 PM IST
16 போட்டியாளர்களில் "இவருக்கு தான்" அமோக ஆதரவு..! தெரியுமா உங்களுக்கு..?

சுருக்கம்

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது மூன்று நாட்கள் முடிவடைந்து ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடந்துகொள்ளும் விதத்தை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 3 தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது மூன்று நாட்கள் முடிவடைந்து ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள்  நடந்துகொள்ளும் விதத்தை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த போட்டியாளர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே கிளம்பி உள்ளது. பிக்பாஸ் சீசன் 3 இல், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டியாளர்களில் பாத்திமா பாபு, தர்ஷன் தியாகராஜன், பருத்திவீரன் சரவணன், இயக்குநர் சேரன், இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, மாடல் அழகியான மீரா மிதுன், அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களில் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்று பார்த்தோமேயானால், இலங்கையில் இருந்து வருகை புரிந்திருக்கும் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியாவிற்கு அதிக ஆதரவை தெரிவித்து வருகின்றனர் பார்வையாளர்கள். இவருக்கு ஆதரவாக விஜய் ரசிகர்களை கொண்ட சமூக வலைதள பக்கங்கள் பல பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி தொடங்கி மூன்று நாட்களிலேயே யாருக்கு ஆதரவு என ஓரளவிற்கு கணிக்க முடிந்தாலும், இன்னும் மீதம் உள்ள நாட்களில் ஒவ்வொருவரின் குணநலன்களும் வெளிப்படும். அதனைப் பொறுத்து யாருக்கு ஆதரவு கூடும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி