கமல்ஹாசனை ஹீரோவாக்கிய பிரபல தயாரிப்பாளர் மரணம்... கொரோனா நேரத்தில் கோலிவுட்டை துரத்தும் தொடர் துக்க செய்தி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 22, 2020, 12:24 PM IST
கமல்ஹாசனை ஹீரோவாக்கிய பிரபல தயாரிப்பாளர் மரணம்... கொரோனா நேரத்தில் கோலிவுட்டை துரத்தும் தொடர் துக்க செய்தி...!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற மனிதராக திகழ்ந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ரகுநாதன் மரணமடைந்த செய்தி திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக தனது கோர தாண்டவத்தை ஆடிவருகிறது. கொரோனாவிடம் இருந்து தப்பிக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக நான்காம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் திரைத்துறையில் சகலவிதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து பசியால் வாடி வருகின்றனர். 

இந்த பிரச்சனைகள் போதாது என்று இந்திய சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்களின் இழப்பு திரைத்துறையை மட்டுமல்லாது, சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. பாலிவுட் நடிகர்கள் இர்பான் கான், ரிஷி கபூர், பாடகி பரவை முனியம்மா, சேது, இயக்குநர் விசு என திரைத்துறையில் அடுத்தடுத்து ஏற்படும் மரணங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான ரகுநாதன் மரணமடைந்தனர். 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

தனது ஆர்.ஆர்.பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள், வரப்பிரசாதம், நீ வாழவேண்டும், அக்னிப்பிரவேசம், ராஜராஜேஸ்வரி, உட்பட 18 படங்களை தயாரித்துள்ளார். குழ்ந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கமல் ஹாசனை பட்டாம்பூச்சி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர். சமீபத்தில் ரகுநாதன் தயாரித்த மரகதக்காடு என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

அதுமட்டுமில்லாது இயக்குனராகவும் நடிகர் பிரபு, சுரேஷ், பாண்டியன் போன்றோரை இயக்கியுள்ளார். 1975ஆம் ஆண்டில் தொடங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற மனிதராக திகழ்ந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ரகுநாதன் மரணமடைந்த செய்தி திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்