திரையரங்கங்களுக்கு விடிவுகாலம் எப்போது? சினிமா துறைக்கு சிறு ஆறுதலை கொடுத்த முதல்வரின் அறிவிப்பு!

By manimegalai aFirst Published Jun 20, 2021, 1:43 PM IST
Highlights

தமிழகத்தில் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்படுவதாக சற்று முன்னர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தெரிவித்த நிலையில் தொடர்ந்து திரையரங்கங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் ஏற்கனவே போடப்பட்டிருக்கும் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிக்கப்படுவதாக சற்று முன்னர் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு தெரிவித்த நிலையில் தொடர்ந்து திரையரங்கங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக மற்ற துறைகளை விட, அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றா அது, திரையுலகம் தான். ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவ துவங்கியபோது, சுமார் 8 மாதங்கள் திரைப்பட பணிகள், மற்றும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த பிறகு, 50 சதவீத திரையரங்குகள் திறக்கவும், திரைப்பட பணிகளை மேற்கொள்ளவும் கட்டுப்பாடுகள் விதித்தது. அதனை பின்பற்றி அணைத்து  பணிகளும் நடந்தது. பின்னர் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்து 3 மாதம் கூட ஆகாத நிலையில் கொரோனா இரண்டாவது அலை தலைதூக்கியது. இதன் காரணமாக, தற்போது மீண்டும் அனைத்து திரையுல பணிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த மே 24 முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல் படுத்தியது. அடுத்தடுத்து மே 31, ஜூன் 7, ஜூன் 14-ம் தேதி என 3 கட்டமாக முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், தொற்று அதிகமாக இருந்த 11 மாவட் டங்களில் குறைவான தளர்வுகளும் மீதமுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அதிகமான தளர்வுகளும் அளிக்கப்பட்டன. 

இந்நிலையில், கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் நீட்டிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு ஜூன் 21-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று மருத்துவ நிபுணர் குழுவினர், அரசு அதிகாரிகள், சிறப்பு பணிக்குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, தற்போது தொற்று அதிகமாக உள்ள கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அதிகம் வேண்டாம் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28ம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில், 3 மாவட்டங்களாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து விட்டாலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான, திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள், ஜவுளி கடைகள் திறக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

எனவே அப்போது திரையரங்குகள் திறக்கும்? என்கிற கேள்விக்கு பதில் கிடைக்காமல் உள்ளது. மேலும் பாதியில் நிறுத்திவைக்கப்பட்ட படங்கள் மற்றும் சின்னத்திரை பணிகளை100 நபர்களுடன் படப்பிடிப்பை நடத்த தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது திரையுலகை சேர்ந்தவர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம் என்றே கூறவேண்டும். மேலும் 27 மாவட்டங்களில் திரையரங்குகளில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!