
கவுதமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது கமல் என்ன செய்தார்? மனம் திறந்த பர்ஷனல் கார் டிரைவர்.
சினிமாவை விட்டு அரசியல் வாழ்க்கைக்கு வந்துவிட்ட கமல்ஹாசன் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சந்தித்த விமர்சனங்களிலேயே மிக கூர்மையானது ’கமல் எனக்கு சம்பள பாக்கி வைத்திருக்கிறார்!’ என்று கவுதமி சொன்னதுதான்.
கமலின் துணைவியாக கணிசமான வருடங்கள் வாழ்ந்த கவுதமியே இப்படி பேசிவிட்ட பிறகு கமலின் ‘நேர்மையை’ உரசாமல் விட்டு வைப்பார்களா அரசியல் வைரிகள்? ஆளாளுக்கு போட்டு வறுத்து வருகிறார்கள். கவுதமியின் இந்த அட்டாக்கை கமல் எதிர்பார்க்கவில்லை! அவருக்கு இது பேரதிர்ச்சிதான்.
இந்நிலையில் கமல்ஹாசனிடம் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பர்ஷனல் கார் டிரைவராக பணியாற்றிய கோயமுத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் கமல் - கவுதமி இடையிலான பர்ஷனல் விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர், ”கவுதமியை ஒரு அம்மாவை போல் பார்த்துக் கொண்டார் கமல்ஹாசன். கவுதமிக்கு உடலில் பிரச்னை ஏற்பட்டு ஆபரேஷன் நடந்தபோது மருத்துவமனையில் சேர்த்து கவனித்துக் கொண்டதோடு தன்னையும் கவுதமியின் உடனிருந்து பலவித உதவிகளை செய்ய வைத்தார்.” என்று கூறியிருக்கிறார்.
கவுதமியின் ‘சம்பள பாக்கி’ குற்றச்சாட்டால் மன வருத்தத்தில் இருந்த கமலுக்கு தன் பழைய டிரைவரின் வார்த்தைகள் பெரும் ஆறுதலாகவும், மருந்தாகவும் அமைந்திருக்கின்றன.
இது போதாதென்று கமலின் நேர்மை, சட்டத்தை அவர் மதிக்கும் விஷயங்கள், தொழிலாளிகளின் சம்பள விஷத்தில் துல்லிய தாராள மனப்பான்மை போன்றவற்றையும் செல்வராஜ் மிக மிக வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.
ஆக மொத்தத்தில் பழைய பர்ஷனல் டிரைவரால் கமலின் மானம் காப்பாற்றப்பட்டிருக்கிறது! என்கிறார்கள் நம்மவர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.