
அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த டயானா சாம்பிகா லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் பிரிவில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவியாம்.
ஜி ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, டியன் சாம்பிகா, மஹிமா, ராதாரவி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “அண்ணாதுரை”.
உலகம் முழுவதும் இன்று வெளியாகவுள்ள இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக லயோலா கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி டயானா சாம்பிகா நடித்துள்ளார். இவர் தன்னுடைய குழந்தைப் பருவம் முதலே சினிமாவில் நடித்து வருகிறாராம்.
லயோலா கல்லூரியில் படித்த, படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எளிதில் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் அனைவரும் சினிமாவில் கொடி கட்டி பறக்கின்றனர்.
இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஜிஎஸ்டி (இ.எம்.ஐ) பாடலுக்கு டயானா டான்ஸ் ஆடியுள்ளார். இப்பாடல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் நயன்தாரா, த்ரிஷா, ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர்தான் தன்னுடைய ரோல் மாடல் என்று டயானா சாம்பிகா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.