விஜயின் சாதி என்ன..? சாயம் வெளுக்க வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்..!

Published : Sep 11, 2021, 05:23 PM IST
விஜயின் சாதி என்ன..? சாயம் வெளுக்க வைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்..!

சுருக்கம்

'விஜய் விஷ்வா' என தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ள அபிசரவணன். கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர். தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.  

'விஜய் விஷ்வா' என தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ள அபிசரவணன். கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர். தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

சாயம் படத்தின் பாடகள்/ ட்ரெய்லர் வெளியீடு நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், பேசும்போது, "மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்..? 

என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது. சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்’’ எனத் தெரிவித்தார்.

நாயகன் விஜய் விஷ்வா பேசும்போது, “அட்டகத்தி, குட்டிப்புலி படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த பின்னர் மீண்டும் அவர்களை தேடி வாய்ப்பு கேட்க போனபோது அங்கே சாதி பார்க்கப்படுவது போல உணர்ந்தேன். அதனால் சாதி பார்க்காத ஆட்களுடன் சேர்ந்து பணிபுரியவேண்டும் என முடிவெடுத்தேன். இன்று இந்த விழாவுக்கு நிறைய சிறப்பு விருந்தினர்களை அழைத்திருந்தோம். ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட சாதி தலைவரின் நாள் என்பதால் அதை வைத்து தாங்களாகவே தொடர்புபடுத்திக்கொண்டு இந்தவிழாவுக்கு வர மறுத்துவிட்டார்கள்.. நிறைய படங்கள் சாதியை பற்றி வருகிறது. ஆனால், இந்தப்படத்தில் சாதியை பற்றியே பேசவேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்'’என்றார்.

 

‘சாதிகள் இல்லையடி பாப்பா’என்று பாடிய பாரதியாரின் நினைவு நாளான இன்று படத்தின் இசை வடிவம் வெளியாகியது. மேலும் இன்று இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளாகும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!