
நடிகை லதா விவகாரத்தில் நடிகர் ரஜினியை ராமாவரம் தோட்டத்தில் வைத்து எம்.ஜி.ஆர் தாக்கியதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் வதந்திக்கு நடிகை லதாவே பதில் அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்து ஒதுங்கிய கால கட்டத்தில் ரஜினி முன்னணி நடிகராக வலம் வரத் தொடங்கினார். அப்போது முன்னணியில் உள்ள பல்வேறு நடிகைகளும் ரஜினியுடன் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கினர். அந்த வகையில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாநாயகிகளில் ஒருவரான லதாவும், ரஜினி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ரஜினியும் – லதாவும் தனிமையில் பொழுதை கழிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இந்த நிலையில் நடிகர் ரஜினிக்கு லதாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. நடிகர் ரஜினி திருமணம் செய்து கொள்ளப்போவது நடிகை லதா தான் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் லதாவை திருமணம் செய்யக்கூடாது என்று கூறி ரஜினியை ராமாவரம் தோட்டத்திற்கு வரவழைத்து எம்.ஜி.ஆர் தாக்கியதாக அப்போது முதலே ஒரு பேச்சு இருந்து வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை லதா ஒரு பேட்டி அளித்துள்ளார்.
முன்னணி நியூஸ் தொலைக்காட்சிக்கு லதா அளித்த பேட்டியின் போது ராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் தாக்கியது உண்மையா என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.அதற்கு வேலை இல்லாதவர்கள் தங்களுக்கு ஏதாவது தேவை என்று கருதி அப்படி ஒரு வதந்தியை உருவாக்கிவிட்டதாக லதா பதில் அளித்துள்ளார். இதன் மூலம் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நிலவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.