நிலானி இத்தோட நிறுத்திக்கணும்… இல்லைன்னா புதுப்புது ஆதாரங்களை வெளியிடுவேன்… லலித்குமார் தம்பி ரகு எச்சரிக்கை !!

Published : Sep 21, 2018, 09:56 AM IST
நிலானி இத்தோட நிறுத்திக்கணும்… இல்லைன்னா புதுப்புது ஆதாரங்களை வெளியிடுவேன்… லலித்குமார் தம்பி ரகு எச்சரிக்கை !!

சுருக்கம்

நடிகை நிலானியை நம்பி எனது அணணன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் இனிமேலாவது அவர் எனது அண்ணன் மீது அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் புதுப்புது ஆதாரங்கனை வெளியிடுவேன் எனவும் அவரது தம்பி ரகு எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, போலீசாரை அவதுாறாக பேசி பிரபலமானவர் 'டிவி' நடிகை நிலானி. இவரும் திருவண்ணாமலையை சேர்ந்த உதவி இயக்குநரான காந்தி லலித் குமாரும் காதலித்து வந்தனர். திருமணம் செய்ய இருந்த நிலையில் திடீரென நிலானி மறுத்ததாக தெரிகிறது. அதனால் மனமுடைந்த லலித்குமார் சில நாட்களுக்கு முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
 


லலித்தின் தற்கொலைக்கு நிலானி தான் காரணம் என லலித்தின் சகோதரர் குற்றம் சாட்டியிருந்தார். நிலானியோ, லலித்குமாருக்கு பல பெண்களுடன் பழக்கம் இருப்பதாகவும், பல பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டியளித்தார். 

சென்னை ஆலப்பாக்கத்தில் வசித்து வந்த நிலானி, நேற்று  நண்பகலில் திடீரென கொசு மருந்தை அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டார். வீட்டில் மயங்கி கிடந்த நிலானியை போலீஸின் உதவியோடு மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லலித் குமாரின் தம்பி ரகு, நடிகை நிலானி எனது அண்ணனின் வாழ்க்கையை கெடுத்து தற்போது தற்கொலை செய்ய வைத்துவிட்டார்.

லலித் எங்களது குடும்ப உறுப்பினர்களிட்ம் இருந்து ஏராளமான பணத்தை கடனாக வாங்கி நிலானிக்காக செலவி செய்துள்ளார். இப்போத அவர் நாடகமாடுகிறார். இது வரை நாங்கள் சிவியராக நிலானி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதற்கு காரணமே அவரது குழந்தைகள்தான்.

அந்த பிஞ்சுகளின் எதிர்காலம் கருதியே நாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்றும், நிலானி தொடர்ந்து எனது தம்பி குறித்து அவதூறு பேசினால்இ நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து ஆதாரங்களை வெளியிடுவோம் என எச்சரித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பயங்கரமான அப்டேட் உடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பராசக்தி... டிசம்பர் 18ந் தேதி ரெடியா இருங்க..!
பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்