விவேக் உடல்நிலை கவலைக்கிடம்... என்ன காரணம் புட்டு புட்டு வைத்த மருத்துவர்..!

Published : Apr 16, 2021, 06:00 PM ISTUpdated : Apr 16, 2021, 06:02 PM IST
விவேக் உடல்நிலை கவலைக்கிடம்...  என்ன காரணம் புட்டு புட்டு வைத்த மருத்துவர்..!

சுருக்கம்

விவேக்கின் உடல் நிலை கவலைக்கிடமாக தான் உள்ளதாகவும், எக்மோ உதவியுடன் விவேக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை உடல்நிலையை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டி உள்ளதாக மருத்துவர் ராஜு சிவசாமி தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கிற்கு நேற்று கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின், மாரடைப்பு ஏற்பட்டது மிகப்பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வந்த நிலையில், கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கும், அவரது மாரடைப்புக்கு எந்த வித தொடர்பும் இல்லை என, SIMS மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடிகர் விவேக் நேற்று இரவு 11 மணியளவில் சுயநினைவு இல்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரை பரிசோதனை செய்ததில், அவரது இதயத்தின் இடதுபுற ரத்த குழாயில் 100 சதவீத அடைப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பின்னர், ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்து 
அடைப்பு நீக்கப்பட்டது .

மேலும் தொடர்ந்து விவேக்கின் உடல் நிலை கவலைக்கிடமாக தான் உள்ளதாகவும், எக்மோ உதவியுடன் விவேக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை உடல்நிலையை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டி உள்ளதாக மருத்துவர் ராஜு சிவசாமி தெரிவித்துள்ளார். அதே போல் விவேக்கின் உடல் நிலை மோசமாகவே இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணனும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் விவேக் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!