
தனது கனவுப்படம் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த ஏ.ஆர்.ரகுமானின் ‘99 சாங்ஸ்’ படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி, தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் '99 சாங்ஸ்'. இந்த படத்தை விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. 2015ல் அறிவிக்கப்பட்ட இப்படம், சுமார் 6 வருடங்களுக்கும் மேலாகத் வெளியாகாமல் உள்ள நிலையில் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் எடில்ஸி, எகான் இணைந்து நடித்துள்ளனர். மற்றும் சில முக்கியப்பாத்திரங்களில் லிசா ரே, மனீஷாகொய்ராலா, இசையமைப்பாளரும் டிரம்மருமான ரஞ்சித் பரோத் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரு பாடகர் பெரும்போராட்டத்துக்குப்பின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆவது தான் கதையின் ஒன் லைன் என்று ஏற்கனவே தகவல் பரவியபோது, படத்தின் கதாசிரியரும் ரஹ்மானே என்பதால் இப்படம் ரஹ்மானின் சுயசரிதை என்று பலரும் நினைத்தனர்.
ஆனால் தான் பார்த்து உணர்ந்த விஷயங்களை, தான் அனுபவித்த சில இசையையும் மையமாக வைத்தே இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில், தீவிரமாக ஏ.ஆர்.ரகுமான் இறங்கி, பல்வேறு தலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து வந்தார். அதே போல் நேற்று நடந்த இந்த படத்தின் பிரீமியர் ஷோவில் பல பிரபலங்கள் '99 சாங்ஸ்' படத்தை கண்டு ரசித்தனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கட்டும்" கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என, '99 தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரகுமானை வாழ்த்தியுள்ளார்'.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.