விவேக் காமெடியன் அல்ல ரியல் ஹீரோ... சமூக இடைவெளியோடு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள்!

By manimegalai aFirst Published Apr 17, 2021, 9:37 AM IST
Highlights

​தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று  காலை ஷூட்டிங் ஒன்றை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது மனைவி மற்றும் மகள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது இதய துடிப்பு குறைவாக இருந்ததாக தெரிகிறது.
 

​தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று  காலை ஷூட்டிங் ஒன்றை முடித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது மனைவி மற்றும் மகள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது இதய துடிப்பு குறைவாக இருந்ததாக தெரிகிறது.

பின்னர் மருத்துவர்கள் அவரது இடதுபுற ரத்த குழாயில் அடைப்பு இருப்பதை சரி செய்த பின்னர், எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் யரும் எதிர்பாராத விதமாக இன்று காலை 4 : 35 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. 

இவரது மறைவிற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ட்விட்டர் மூலமாகவும், நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக ரசிகர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் வரிசையில் நின்று, விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மேலும் பல பிரபலங்களும் வரிசையில் நின்று, சின்ன கலைவாணர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் நாசர், மயில்சாமி, மனோ பாலா, சூரி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட சக நடிகர்கள் தொடர்ந்து, விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி விவேக் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடிகர் விவேக்குடன், தூள் உள்ள பல படங்களில் நடித்துள்ள மயில் சாமி, விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பொய்ந்தனர் செய்தியாளர்களிடம் பேசியபோது.... 'விவேக்' ஒப்பற்ற நடிகர் என்றும், பலருக்கு அவர் உதவியுள்ளதாக தெரிவித்தார். நடிகர் சூரி, விவேக் ஒரு காமெடியன் அல்ல அவர் ஒரு ரியல் ஹீரோ என்றும், தன்னுடைய காமெடியில் கூட சமூக கருத்துக்களை வலியுறுத்தியவர் என தெரிவித்தார். நடிகர் நாசர் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் தற்போது வரை இந்த சம்பவத்தை நம்ப மனம் மாறுகிறது என வேதனையை பகிர்ந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில், ஒப்பற்ற காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருக்கும் விவேக், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய ஈடு இணையில்லா நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். மேலும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 5 முறை தமிழக அரசின் விருதையும் பெற்றுள்ளார். 

தற்போது நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திற்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலிக்கு பின், இன்று மாலை 5 மணிக்கு விருகம்பாக்கத்தில் உள்ள தகன மேடையில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.  

click me!