25 நாள் முடிவில் வசூல் வேட்டையாடிய பேட்ட, விஸ்வாசம்! சென்னை ரிப்போர்ட்...

Published : Feb 04, 2019, 10:29 AM ISTUpdated : Feb 04, 2019, 10:31 AM IST
25 நாள் முடிவில் வசூல் வேட்டையாடிய பேட்ட, விஸ்வாசம்! சென்னை ரிப்போர்ட்...

சுருக்கம்

கடந்த பொங்கலுக்கு ஸ்பெஷலாக ரிலீசான அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் பேட்ட படம் இரண்டுமே நல்ல வசூல் வெயிட்டை நிகழ்த்தியது.  25 நாள் முடிவில் சென்னையில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களின் வசூல் நிலவரங்கள் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாகிய அஜித் மற்றும்   ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருந்த படங்களான விஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் ஒரே நாளில் மோதியது.

சென்னை சிட்டியில் பேட்ட அதிகமான திரையரங்கில் ரிலீஸ் ஆனது, செங்கல்பட்டு பகுதியில்  பேட்ட படத்தை விட "விஸ்வாசம்" அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இருந்தது. அதேபோல தமிழகத்தின் பல இடங்களில் அதிக தியேட்டர்களில் "விஸ்வாசம்" தான் ரிலீசானது.

படம் வெளியான முதல் வாரத்திலிருந்து  சென்னை வசூலில் பேட்ட படம் முதலிடத்தையும், தமிழக வசூலில் பொறுத்தவரை விஸ்வாசம் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், பேட்ட விஸ்வாசம்  ரிலீசாகி 25 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த இரண்டு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பேட்ட – ரூ 14.92 கோடியும், விஸ்வாசம் 12. 41 கோடி  வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Most Profitable Movie in 2026 : பட்ஜெட் வெறும் 9 கோடி... ஆனா வசூல் 80 கோடி! கோலிவுட்டை மிரள வைத்த படம் எது?
கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.! மைக் மோகனின் நேர்மையான சினிமா பயணம்.!