தமிழ்நாட்டை தாண்டி இலங்கையிலும் விஸ்வாசம் செய்யும் வசூல் வேட்டை... தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு!!

Published : Jan 29, 2019, 01:00 PM IST
தமிழ்நாட்டை தாண்டி இலங்கையிலும் விஸ்வாசம் செய்யும் வசூல்  வேட்டை... தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு!!

சுருக்கம்

தமிழ் சினிமா படங்களில்  அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் தான் மாற்றி மாற்றி வசூலில் சாதனை செய்து வந்தது . இப்போது அஜித், ரஜினி படத்திற்கு இடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடந்து வருகிறது. சென்னை வசூலில் ரஜினியின் பேட்ட படம் தான் முன்னிலையில் இருக்கிறது,  ஆனால் தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் விஸ்வாசம் தான் மாஸ் வசூல் செய்துள்ளது. 

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் வசூல் சாதனை செய்ய, தமிழகத்தில் ஆல் டைம் அதிக லாபம் கொடுத்த படம் என தியேட்டர் நிறுவனம் வசூல் விவரங்களை வெளியிட்டு வருகின்றன.

அஜித் படங்கள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுவது விஸ்வாசம் படம் தான்.  குடும்பங்களுக்காகவே எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுக்கிறார்கள். எல்லா இடத்திலும் படம் நல்ல வசூல், லாபம் தான். தமிழ்நாட்டை தாண்டி இலங்கையிலும் வசூல் வேட்டையாடி வருகிறது விஸ்வாசம் .

இலங்கையிலும் வசூல் மற்றும் மக்கள் கூட்டத்தில் "ஆல் டைம் நம்பர் ரெக்கார்ட்" செய்துள்ளதாம். அடுத்தடுத்து அங்கிருக்கும் திரையரங்க உரிமையாளர் அப்டேட் கொடுத்து வருகின்றனர். இப்போது சரஸ்வதி சினிமாஸ் "சரஸ்வதி சினிமாவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடத்தில் விஸ்வாசம் வெற்றி நடைபோடுகின்றது".

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்