அர்ஜுனுக்குப் போட்ட பழைய டியூனை அஜீத் தலயில் கட்டிய இமான்..

Published : Dec 23, 2018, 05:09 PM ISTUpdated : Dec 23, 2018, 05:12 PM IST
அர்ஜுனுக்குப் போட்ட பழைய டியூனை அஜீத் தலயில் கட்டிய இமான்..

சுருக்கம்

அஜீத்தின் விஸ்(சு)வாசம் படம் பொங்கலன்று வெளியாக இருக்கிறது. இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கைகோர்த்துள்ளார் அஜீத். கடந்த மே மாதம் ஆரம்பித்த படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்-தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.


அஜீத்தின் விஸ்(சு)வாசம் படம் பொங்கலன்று வெளியாக இருக்கிறது. இயக்குனர் சிவாவுடன் நான்காவது முறையாக கைகோர்த்துள்ளார் அஜீத்.
கடந்த மே மாதம் ஆரம்பித்த படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்-தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியானது. இமான் தான் படத்தின் இசையமைப்பாளர். ஆடியோ வெளியீட்டின் போது விஸ்வாசம் படத்தின் தீம் மியூசிக்கும் வெளியானது. தீம் மியூசிக்கை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே என்று இசை ஆர்வலர்கள் தேடிப் பார்க்க, கடைசியில் அது அர்ஜூன் நடித்து 2007ல் வெளியான மருதமலையின் தீம் மியூசிக் போலவே இருக்கிறது என்று கண்டுபிடித்தார்கள்.

இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மருதமலை படத்தின் இசையமைப்பாளரும் இமானே தான்.  தனது படத்தின் இசையையே மறு காப்பி மற்றும் உல்ட்டா செய்து அடித்து விட்டிருக்கிறார் விஸ்வாசமில்லா இமான் விஸ்வாசத்திற்கு.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி