இளையராஜாவை எதிர்க்கும் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திராசேகர்!

By manimegalai aFirst Published Dec 23, 2018, 4:33 PM IST
Highlights

இசைஞானி இளையராஜா தான்  கம்போஸ் செய்த திரைப்பட பாடல்களை, பொது நிகழ்ச்சிகளில் பாடி சம்பாதித்தால்... ராயல்டி கொடுக்க வேண்டும் என கூறியுள்ள விஷயம் தற்போது திரையுலகில் விவாதிக்க கூடிய ஒரு சம்பவமாக மாறியுள்ளது.

இசைஞானி இளையராஜா தான்  கம்போஸ் செய்த திரைப்பட பாடல்களை, பொது நிகழ்ச்சிகளில் பாடி சம்பாதித்தால்... ராயல்டி கொடுக்க வேண்டும் என கூறியுள்ள விஷயம் தற்போது திரையுலகில் விவாதிக்க கூடிய ஒரு சம்பவமாக மாறியுள்ளது.

இதனை மையமாக வைத்து, சில முன்னணி செய்தி தொலைக்காட்சிகள் இது சரியா? தவறா? என்கிற நோக்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இளையராஜாவின் இந்த கோரிக்கைக்கு திரையுலகினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நேற்று இளையராஜா மீது பிடி செல்வகுமார் தலைமையில் தயாரிப்பாளர்கள் குழு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 

அதில் ஒரு திரைப்படத்தில் பாடல்கள் கம்போஸ் செய்ய இளையராஜா, தயாரிப்பாளரிடம் இருந்து சம்பளம் பெற்றுவிடுவதால், அவர் இசையமைத்த பாடல்கள் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம் என்றும், இளையராஜா பெற்ற ராயல்டியில் 50% தயாரிப்பாளருக்கு வழங்கவேண்டும் என்றும் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து தளபதி விஜய்யின் தந்தையும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறுகையில்   'இளையராஜாவின் பாடல் ராயல்டி தயாரிப்பாளர்களுக்கே என்றும், தயாரிப்பாளர்கள் இந்த ராயல்டியை பெற ஓற்றுமையுடன்  செயல்பட வேண்டும்' என்று இளையராவிற்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். 

 

click me!