
“இந்தக்கதை இத்தோட முடியலை. ஒண்ணு நான் இருக்கணும்;இல்லைனா ஓமர் இருக்கணும்” எனச் சொன்னதோடு விஸ்வரூபத்தின் முதல் பாகம் முடிந்ததால் 2013 ஆம் ஆண்டு வெளியான விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
முதல் பாகத்தைப் போலவே ஆக்ஷன் காட்சிகள் ஆரம்பமாகும் டிரைலரில்,“எந்த மதத்தையும் சார்ந்து இருக்குறதுல தப்பு இல்ல. ஆனா தேசத்துரோகியா இருக்குறது தப்பு” என நச் வசனம் பேசுகிறார் உலக நாயகன்.
அடுத்ததாக, ஆண்ட்ரியா பர்தா அணிந்து இஸ்லாமியப் பெண்போல காட்சியளிக்கிறார். முதல் பாகத்தில் இஸ்லாமியராக கமல் மட்டுமே நடித்திருந்தார். இந்தக்காட்சியை பார்க்கும்போது இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவும் இஸ்லாமியப் பெண்ணாக நடித்திருக்க வாய்ப்பு உள்ளது.
அடுத்ததாக டிரைலரின் இறுதியில், கைகள் கட்டப்பட்ட நிலையில் சேரில் அமரவைக்கப்பட்டிருக்கும் கமல் திடீரென வீறுகொண்டு எழுந்து எதிராளிகளை வீழ்த்துவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. முதல் பாகத்திலும் இதே போன்ற ஒரு சண்டைக்காட்சி அமைக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருந்தது. எனவே இந்த சண்டைக்காட்சிக்கும் பலத்த வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது.
டிரைலர் வெளியீட்டுக்குப் பிறகு பேசிய நடிகர் கமல், "இந்தப்படம் வர கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. ஆனால் தாமதத்திற்கு காரணம் ராஜ் கமல் அல்ல, அது உங்களுக்கே தெரியும். முதல் பாகத்துக்கே தாமதத்துக்கான காரணம் என்னவென்பது எல்லோருக்கும் தெரியும், கிட்டத்தட்ட அதே காரணங்கள்தான் இதற்கும் தொடர்ந்தன.
இதில் நடித்தவர்கள் முக்கியமாக அன்பிற்காக மட்டுமே நடித்தார்கள். நாசருக்கு வழக்கமா பெரிய வேடம் இருக்கும். இதில் அவ்வளவு பெரிய வேடம் இல்லையென்றாலும் ரொம்ப முக்கியமான வேடம்.
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சுமார் 35 ஆண்டு கால நண்பரான இயக்குநர் சேகர் கபூர் நடித்திருக்கிறார். ராகுல் போஸ் அற்புதமாக நடித்திருக்கிறார்” என்றார். “ஹாலிவுட் படங்களைப்போல இது பல்லாயிரம் பிரிண்ட்களுடன் வெளிவரவிருக்கிறது. கூடிய விரைவில் தமிழ்ப் படங்கள் உலகெங்கும் பார்க்கக்கூடிய படங்களாக அமையும்.
அப்படி இருக்கும்போது எங்கோ ஓர் இடத்தில் ‘ராஜ் கமல்’ பெயரும் இடம் பெற்றால் நாங்கள் வாழ்ந்ததும், உழைத்ததும் வீண் போகவில்லை என நம்புவோம்” என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.