
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்த படம் சைக்கோ கொலையாளியை கண்டறியும் சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டு வெளியானது.
தற்போது FIR என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் விஷ்ணு விஷால். இப்படத்தில் மஞ்சிமா மோகன் ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கௌதம் மேனனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற பிப்ரவரி 11-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில், FIR திரைப்படம் ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டி வருகிறது. அதன்படி இப்படத்தின் ரிலீசுக்கு பிந்தைய ஓடிடி உரிமையை ரூ.7 கோடிக்கு விற்றுள்ளார்களாம். இதன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ஓடிடி உரிமை நல்ல விலைக்கு விற்பனை ஆகி உள்ளதால் விஷ்ணு விஷால் உற்சாகமடைந்துள்ளாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.