
கொரோனா வைரஸின் கோர பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 527 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்த நிலையில் நேற்று 508 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,537 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.
எனவே, மூன்றாவது கட்டமாக போடப்பட்டுள்ள, ஊரடங்கு உத்தரவு மேலும் சில தினங்களுக்கு நீடிக்கப்படுமா என்கிற அச்சமும் எழுந்துள்ளது.
மேலும், திரையுலகை சேர்ந்த பலர், திரைப்பட பணிகள் முடங்கியுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கத்தில், நேற்றைய தினம் நடிகர் விஜய் ஆன்டனி, படப்பிடிப்பு நடைபெறாததாலும் படப்பிடிப்பு முடிந்த திரைப்படங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் செய்ய முடியாமல் இருப்பதாலும் தயாரிப்பாளர்களின் முதலீட்டுக்கு வட்டி ஏறிக்கொண்டே செல்கிறது என்பதை அறிந்து, 25 சதவீதம் தன்னுடைய சம்பளத்தை குறைந்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியானது.
இதற்க்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்நிலையில் இவரையே விஞ்சியுள்ளார், நடிகர் விஷ்ணு விஷால். தான் நடித்து வந்த 3 திரைப்படத்தில் பணிபுரியும் கிரியேட்டிவிட்டி டீம், தயாரிப்பாளர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஆகியோர்களுக்கு தன்னுடைய முழு சம்பளத்தையும் வழங்கியுள்ளார்.
அணைத்து பணிகளும் முடங்கி இருந்த இந்த நிலையில் நடிகர் விஷ்ணுவிஷாலின் இந்த உதவிக்கு அவர்கள் மனதார நன்றி தெரிவித்து வருகிறார்கள்.
விஷ்ணு விஷாலின் இந்த உதவி குறித்த இயக்குனர் அருண் வைத்தியநாதன், தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.