
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் இந்த வருடம் மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஷால் தரப்பினர் சார்பில் நடிகை குஷ்பூ போட்டியிடுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் குஷ்பூ இந்த தேர்தலில் தோற்றால் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணியதால், அவர் விலகியதாக ஒரு சில தகவல் வெளியானது.
தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்ய பட்ட விஷால் மன்னிப்பு கோரியதனால் அவரது சஸ்பெண்ட் இன்று ரத்து செய்யப்பட்டது என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது, ஒரு வேலை தயாரிப்பாளர் சங்கம் மறுத்தால் உயர் நீதி மன்றமே ரத்து செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தல் அதிகாரிகளை சந்தித்து தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
விஷால் இந்த தேர்தலில் நிற்க உலக நாயகன் கமல் ஹாசன் போன்ற சில முக்கிய நடிகர்களாகவும் தயாரிப்பாளர்களாகவும் உள்ளவர்கள் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.