
தமிழகத்தில் தன்னிகரில்லா முதலமைச்சர்களில் ஒருவர் அண்ணா... இன்று அவருடைய 48வது நினைவு தினத்தை யொட்டி அவரது நினைவிடத்தில் பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சமத்துவ மக்கள்கட்சி தலைவர் நடிகர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா தான் நடத்தி வரும் ரேடான் புரடொக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் 'அண்ணாதுரை' என்கிற தலைப்பில் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் பிச்சைக்காரன், சைத்தான் , எமன் என தொடர்ந்து வித்தியாசமான பெயர்களை தன்னுடைய படங்களுக்கு பெயராக சூட்டி வரும் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை சீனுவாசன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.