
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்று தலைவராக வெற்றி பெற்றதோடு பல அதிரடி நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார் விஷால். அனைத்தும் சின்ன தயாரிப்பாளர்களை காப்பாற்றும் மற்றும் எல்லா தயாரிப்பாளர்களுக்குமே கை கொடுக்கும் நடவடிக்கைகள்.
ஆனால் தலைவரானதால் அவரது நடிப்பில் தயாரிப்பில் உருவாகும் படங்கள் தான் தாமதமாகிக்கொண்டிருக்கின்றன.
துப்பறிவாளன் படம் கடந்த பொங்கலுக்கு திட்டமிடப்பட்டது. இரும்புத்திரை கடந்த ஏப்ரல் 14ல் வெளியாகவேண்டியது. சங்க வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருவதால் இரண்டுமே இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. துப்பறிவாளன் படத்தின் கடைசி ஷெட்யூல் சென்றுக்கொண்டிருந்தது.
மும்முரமாக சென்றுக்கொண்டிருந்த படப்பிடிப்பை விட்டுவிட்டு கேரளா சென்று மலையாள வில்லன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஷால். மோகன்லால், மஞ்சு வாரியர், ஹன்சிகாவும் இதில் நடிக்கிறார்கள்.
இங்கே மும்முரமாக துப்பறிவாளன் சென்றுகொண்டிருந்தபோது கேரளாவில் வில்லன் படத்துக்காக செட் போட்டு விஷால் தேதிகளுக்காக காத்திருந்தார்களாம்.
இந்தப் படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்வதாக அந்த தயாரிப்பாளர் அறிவித்து வேறு விட்டார். எனவே ’தான் பாதித்தாலும் பரவாயில்லை தன்னை நம்பிய இன்னொரு தயாரிப்பாளர் பாதிக்கக் கூடாது’ என்று விஷால் தன்னுடைய சொந்த படத்தை விட்டுவிட்டு மலையாள படத்தில் நடிக்க சென்றிருக்கிறார். இதனால் விஷாலுக்கு அந்தப் படத்தின் சம்பளத்தை விட அதிக நஷ்டமாகும்.
கொசுறு - நேற்று விஷால் தந்தை ஜிகே ரெட்டி அவர்களுக்கு பிறந்தநாள். ஷூட்டிங் பாதிக்குமே என்று அப்பாவை பார்க்க கூட வரவில்லையாம்.
அப்பாவோட நீண்ட நாள் ஆசையான உங்க கல்யாணத்தை முடிங்க விஷால்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.