ஜூன் 22 தளபதியின் தெறி கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்

 
Published : Jun 07, 2017, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
ஜூன் 22 தளபதியின் தெறி கொண்டாட்டம் – ரசிகர்கள் உற்சாகம்

சுருக்கம்

Thalabathy fans are so exciting on june 22nd

இளையதளபதி விஜயின் 43 வது பிறந்தநாள் இந்த மாதம் 22 ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்பட உள்ளது.

வருகிற ஜூன் 22 ஆம்இ தேதி இளையதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடவுள்ளனர். ரசிகர்களுக்கு விருந்தாக சென்னையில் சில திரையரங்குகளில் விஜய் நடித்த சிறந்த படங்களை சிலவற்றை தேர்ந்தெடுத்து திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள திரையரங்கில் ‘தலைவா’ படம் திரையிடப்படும். மேலும் வேறு சில திரையரங்குகளில் விஜய் நடித்த “துப்பாக்கி”,‘கத்தி’,’போக்கிரி’ உள்ளிட்ட படங்கள் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் கேரளா மாநிலத்திலும் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக அவரது திரைப்படம் திரையிட உள்ளர்களாம்.

இதையடுத்து இதுவரை இல்லாத வகையில் இந்த வருடம் இளையதளபதியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஜூன் 22 ல்  ஆஸ்திரேலியாவில் ‘துப்பாக்கி’ படம் திரையிடப்பட உள்ளதாகவும் இதற்கான டிக்கெட் முன்பதிவு இணையதளங்களில் தொடங்கிர்யிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இத்திரைப்படம் ஆஸ்திரேலியா மெல்பெர்னில் உள்ள பேக்லாட் திரையரங்கில் திரையிடப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் விஜய் ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது போன்ற ஒரு நிகழ்வு வெளிநாடுகளில் இதற்கு முன்பு எந்த நடிகருக்கும் நடத்தப்பட்டதில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

மேலும் அட்லி இயக்கத்தில் தயாராகி வரும் விஜயின் 61 வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!