"நடிகர் விஷால் திடீர் சஸ்பென்ட்" - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

Asianet News Tamil  
Published : Nov 15, 2016, 12:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
"நடிகர் விஷால் திடீர் சஸ்பென்ட்" - தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

சுருக்கம்

நடிகர் விஷாலை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்வதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிட பிரச்சனையில் முறைகேடுகள் நடந்ததாக சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக போற்கொடி உயர்த்தினார்.

இதனைதொடர்ந்து நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் நாசர், விஷால் கூட்டணி வெற்றி பெற்றது. பின்னர் நடிகர் சங்க கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்தனர்.

சன் டிவியில் நட்சத்திர கிரிக்கெட், கலை நிகழ்ச்சிகள் போன்ற பல வழிகளில் நடிகர் சங்க கட்டிடத்தை மீண்டும் பிரம்மாண்டமாக எழுப்புவோம் என விஷால் அவ்வப்போது பேட்டிகளில் கூறி வந்தார்.

மேலும், நடிகர் சங்க பிரச்சனையை எப்படி முடிவக்கு கொண்டு வந்தோமோ, அதுபோல் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளையும், பிரச்சனைகளையும் தீர்க்க முயற்சிப்போம் என விஷால் கூறி வந்தார்.

இது தயாரிப்பாளர் தாணுவிற்கு கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பாளராகவும், பல படங்களை தயாரித்து வந்த விஷால் ஒரு வார இதழுக்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக அளித்த பேட்டி பெரும் பிரச்சனையை கிளப்பியது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், விஷால் அளித்த பதில் திருப்தி தராததால், சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க முயல்வதாகவும், சங்க கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும் கூறி நடிகர் விஷாலை தயாரிப்பாளர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம் செய்வதாக தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீச வச்ச குழந்தையாக மாறிய விஜய்... அப்பாவை பார்த்ததும் பாசத்தில் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த தளபதி - வீடியோ இதோ
தளபதியின் தம்பிகள் பேசியது என்ன? அட்லீ, லோகேஷ், நெல்சன் ஸ்பீச் இதோ