HD யில் படத்தை ரிலீஸ் பண்ண தமிழ்ராக்கர்ஸ்... சிம்பு படம் என்பதால் வாய்திறக்காத விஷால்!! பழைய பகைக்கு ரிவெஞ்சா??

Published : Feb 03, 2019, 11:23 AM ISTUpdated : Feb 03, 2019, 11:28 AM IST
HD யில் படத்தை ரிலீஸ் பண்ண தமிழ்ராக்கர்ஸ்...  சிம்பு படம் என்பதால் வாய்திறக்காத விஷால்!! பழைய பகைக்கு ரிவெஞ்சா??

சுருக்கம்

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸை எதிர்த்து ஒரு வார்த்தை கூட கேட்காததால், சிம்பு உடனான  பழைய பகைக்கு ரிவெஞ் எடுப்பதாக சொல்கிறார்கள்.

எப்போதுமே படம் ரிலீஸ் ஆனா சுமார் ஒரு 5 மணிநேரத்துல குட் குவாலிட்டியோட தமிழராக்கர்ஸ் ரிலீஸ் பண்ணுவாங்க,  HD பிரிண்ட் வேணும்னா மினிமம் 10 மணிநேரம் காத்திருந்தா போதும் பக்கா குவாலிட்டியோட கிடைக்கும், இன்னும் கொஞ்சம் நாள் போனால் சிம்பு மாதிரி ஆட்கள் படத்தை ஷூட்டிங் நடுவிலேயே லைவ் டெலிகாஸ்ட் ஆகிவிடும்போல, அந்த அளவிற்கு நடக்கிறது இவங்க குடுமிப்பிடி குஸ்தி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கபாலி படத்தை முதலில் ரிலீஸ் செய்வது நீயா, நானா  என தயாரிப்பாளருக்கும்  தமிழ்ராக்கர்ஸ்க்கும் செம்ம சண்டை அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக திருட்டு விசிடி, தமிழராக்கர்ஸ் என ராத்திரியில் கூட புலம்பிக்கொண்டிருந்தார் விஷால். மேடையில் அசிங்க அசிங்கமாக திட்டுவதும், ஆக்ரோஷமாக சவால் விடுவதுமாக இருந்தார். ஆனால் இதையெல்லாம் தமிழராக்கர்ஸ் மதிப்பதாகவே இல்லை நீ சொல்வதை சொல், நான் செய்வதை செய்கிறேன் என்பது போல, வாரா வாரம் வெள்ளிக்கிழமை படங்களை ரிலீஸ் பண்ணப் போதும் நேரத்திற்கு ரிலீஸ் செய்வது என  பிசியாக இருக்கிறது.

சரி வாங்க விஷயத்துக்கு போவோம்,  நேற்று முன்பு உலகம் முழுவதும் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தை ரிலீஸ் செய்தது லைகா நிறுவனம். டம்மி குவாலிட்டியாக எப்போதுமே ஒரு ஷோ முடிவதற்குள் படத்தை ரிலீஸ் செய்வது தமிழ்ராக்கர்ஸின் வழக்கம், ஆனால் இந்த படம் வெளியான வெகு நேரம் வரை தமிழ்ராக்கர்ஸில் ரிலீஸ் ஆகவில்லை,

வந்தா HD தரத்தில் தான் வருவேன் என சுமார் 10 மணி நேரம் கழித்து பக்கா குவாலிட்டியோடு ரிலீஸ் செய்தது தமிழ்ராக்கர்ஸ். வழக்கமாக படம் வெளியாகும் முன்பு தமிழ்ராக்கர்ஸை கடுமையாக எச்சரித்து அறிக்கை விடும் விஷால், சிம்பு படமான வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்கு கொட்டாவி விடக் கூட வாய்திறக்கவில்லை, காரணம் பழைய பகைக்கு ரிவெஞ் எடுக்கவே சைலண்ட்டாக இருப்பதாக சொல்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Most Profitable Movie in 2026 : பட்ஜெட் வெறும் 9 கோடி... ஆனா வசூல் 80 கோடி! கோலிவுட்டை மிரள வைத்த படம் எது?
கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்.! மைக் மோகனின் நேர்மையான சினிமா பயணம்.!