இளையராஜா நிகழ்ச்சியை தடுக்க சதி நடக்கிறது! 8 மணி நேரத்திற்கு பின் விடுதலை செய்யப்பட்ட விஷால் ஆவேசம்!

By manimegalai aFirst Published Dec 20, 2018, 7:27 PM IST
Highlights

நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என இரண்டு முக்கிய பொறுப்பை வகித்து வரும் விஷால், தயாரிப்பாளர் சங்க பதவியை ஏற்று, இவ்வளவு காலம் ஆகியும் சொன்னபடி எந்த வார்த்தையையும் அவர் நிறைவேற்றாததால், தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் நேற்று, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தை முற்றுகையிட்டதோடு, தயாரிப்பாளர் சங்க தலைவர் அறைக்கு பூட்டு போட்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்நிலையில் இதனை எதிர்த்து, நடிகர் விஷால் இன்று காலை பூட்டை உடைக்க முயன்றார். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின் வாக்கு வாதம் அதிகமாகவே விஷால் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

8 மணி நேரத்திற்கு பின் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள விஷால், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். "அப்போது பேசிய அவர்." 

செய்யாத குற்றத்திற்காக 8 மணிநேரம் சிறை தண்டனை அனுபவித்துள்ளதாக வேதனையோடு கூறினார். மேலும் இப்படி தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் செயல் படுவதற்கு காரணம். இசைஞானி இளையராஜாவின் 75 இசை நிகழ்ச்சியை  தடுப்பதற்காக நடைபெறும் சதி என குற்றம் சாட்டினார்.

ஆனால் யார் தடுத்தாலும் இளையராஜாவிற்கு நிச்சயம் விழா நடத்துவோம் என்றும் இந்த விழாவின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு நலிந்த தயாரிப்பாளர்கள் பெயரில் ஒரு வீட்டு மனை வாங்கி கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் கூட தங்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறிய விஷால், இந்த பிரச்னையை முறைப்படி நீதி மன்றத்திற்கு எடுத்து செல்ல உள்ளதாகவும் தனக்கு நீதி மன்றத்தின் மீது அதீத நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். 

click me!