
செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஷால். நிஜ வாழ்விலும் நான் ஹீரோ தான் என்று நினைத்துக் கொண்டு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருபவர், தனது அம்மா பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலமாக பள்ளி மாணவர்கள், ஏழை எளியோறுக்கு உதவிகளும் செய்து வருகிறார்.
வலது கை செய்றது இடது கைக்கு தெரிய கூடாது என்று சொல்வார்கள். ஆனால், இவர் தான் வித்தியாசமான ஆளாச்சே. அவர் செய்யும் உதவிகளை அனைவருக்கும் தெரியும்படி தான் செய்வார். அதுவும், பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுப்பதில் மிக தீவிரமாக இருக்கிறார் விஷால். அதற்காக அவரை, நீங்கள் புகழ்ச்சிக்கு அலைபவர் என்று நினைக்க வேண்டாம். அரசியலில் ஈடுபடுவார் என்றும் நினைக்க வேண்டாம்.
அவர் என்ன நினைத்தாரோ யாருக்கு தெரியும்?
இதற்கிடையே, விஷாலின் நடவடிக்கைக்கு சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவரான தயாரிப்பாளரும், நடிகருமான சுரேஷ் காமாட்சிக்கு, விஷால் ரசிகர் என்ற பெயரில் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விஷாலின் தீவிர ரசிகர் என்று கூறிக்கொள்ளும் அந்த நபர், சுரேஷ் காமாட்சியை, இத்துடன் விஷாலைப் பற்றி பேசுவதை நிறுத்தி கொள். இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். என்று மிரட்டியுள்ளார்.
மேலும், விஷால் யார் என்று தெரியுமா? அவரது பின்னணி தெரியுமா? எவ்வளவு பணம் செலவழித்து வருகிறோம் என்று தெரியுமா? என்றும் பேசி இருக்கிறார்.
மேலும், தயாரிப்பாளர்களுக்கும், நடிகர் சங்கத்தில் உள்ளவர்களுக்கும் பல உதவிகளை செய்து வரும் விஷாலை தமிழகமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது.
தற்போதைய தமிழக அரசியல் இருக்கும் நிலமையில், விஷால் தேர்தலில் நின்றால் அவரை தமிழக முதல்வராக்கி கொண்டாடுவோம்” என்றும் பிதற்றியுள்ளார் அந்த ரசிகன்.
விஷாலின் இந்த தீவிர ரசிகரின் ஆடியோ வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.
மவனே அந்த ரசிகர் மட்டும் நேரில் கிடைத்தால்… அப்படின்னு ஒரு பதிவு, ஒவ்வொரு வாட்ஸ்-அப் குழுவிலும் பதிவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.