
நடிகர் சங்க பொது செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பதவிகள் உயர்ந்து கொண்டே போனாலும் விஷால் தன்னுடைய அறக்கட்டளை மூலம் செய்து வரும் உதவிகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில், பிரபல நடன கலைஞர் ஜமுனா என்பவர், வயதான சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டு அனாதையாக வடபழனியில் பிச்சை எடுத்து வந்தார்.
இவரை பற்றி சமீபத்தில் பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன, மேலும் நலிந்த கலைஞர்களுக்கு உதவிகள் செய்து வரும் விஷால் தனக்கு எதாவது உதவிகள் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை அறிந்த விஷால், தன்னுடைய மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி கிருஷ்ணனையும் உடனே அவர்களை சந்தித்து தேவையான உதவி செய்யுமாறு அனுப்பினார். அப்போது திருமதி. ஜமுனா அவர்களிடம் உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம் என்று தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் என்னை முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டாம். எனக்கு மாதா மாதம் உதவி தொகைவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை நிறைவேற்றுவோம் என்று கூறி புது துணியும் அளித்துள்ளார்கள், மேலும் மாதம் தோறும் 2000 ருபாய் வழங்கவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.