
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது இதில் வெற்றி பெற்ற நடிகர் விஷால் தலைவராக தேர்வு செய்யப்பட்டு தயாரிப்பாளர் சங்க உரிமைகள் அனைத்தையும் கைப்பற்றினார்.
இது குறித்து அவர் பதவியேற்கும்போது கூறுகையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிமிடம் முதல் தங்களது பணியை தொடங்கிவிட்டதாகவும், ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் நல்லது செய்வதே தங்களது பணி என்றார்.
இந்நிலையில் தற்போது அவர்கள் கூறியபடியே தங்கள் பணியையும் தொடங்கிவிட்டனர்.
தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை சென்றுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளது என்னவென்றால்...
அன்பார்ந்த தயாரிப்பாளர்களுக்கு, தங்களது நிலுவையில் உள்ள சாட்டிலைட் விற்காத, வெளியிடப்படாத அல்லது மானியம் கிடைக்கப்பெறாத படங்களின் விவரத்தை கீழ்க்கண்ட எண் அல்லது மின்னஞ்சலில் வரும் வெள்ளி மாலை 6.00 மணிக்குள் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என ஒரு தொலைபேசி எண், மட்டும் மின்னஞ்சல் வெளியிட்டுள்ளனர். "9789972260 " " tfpccommitee@gmail.com "
விஷால் அதிரடியாக இந்த வேளையில் இறங்கியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, இவரது செயலை பார்த்து மற்ற தயாரிப்பாளர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.