
'கலாட்டா டாட்காம்' இணைய தளத்தின் சினிமா அவார்டு நிகழ்ச்சி சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மொத்தம் தொகை 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள்.
இதை கமல்ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்ட அதே மேடையில் , பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக அதே 10லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் விஷால். அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது.
சினிமா வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர் நலனுக்காக இது அளிக்கப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.