
நடிகர் சங்க தலைமையை நாசர் கைப்பற்றியதில் இருந்து, நடிகர் சங்கத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவித்தார்.
அதன் படி கடந்த ஆண்டும் நடிகர் நடிகைகளுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது தீபாவளி பண்டிகை வர இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்து வரும் நடிகர், நடிகைகளை நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நேரில் சந்தித்து புத்தாடை மற்றும் இனிப்புகளை பரிசாக வழங்கினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.