’தீராத விளையாட்டுப் பிள்ளை’ விஷாலின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது...மணமகளை அறிவித்தார் அப்பா...

Published : Dec 31, 2018, 10:32 AM IST
’தீராத விளையாட்டுப் பிள்ளை’ விஷாலின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது...மணமகளை அறிவித்தார் அப்பா...

சுருக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். விஷாலும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் காதலித்து வருவதாகவும் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பல வருடங்களாகவே கிசுகிசுக்கள் நடமாடி வருகின்றன. இந்த கிசுகிசுக்களை இருவருமே ரசித்து வந்தனர்.  


நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை திருமணம் செய்துகொள்ளமாட்டேன்’ என்று சபதம் செய்திருந்த நடிகர் விஷாலுக்கு ஆந்திர மணப்பெண்ணுடன் மிக விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இச்செய்தியை விஷாலின் தந்தை உறுதி செய்கிறார்.

தற்போது 42 வயதில் இருக்கும் விஷால், தமிழில் ‘செல்லமே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமனாவர். 2004-ல் இந்த படம் வெளியானது. தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர், பட்டத்து யானை, பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, பாயும்புலி, மருது, கதகளி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.
 
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். விஷாலும் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் காதலித்து வருவதாகவும் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பல வருடங்களாகவே கிசுகிசுக்கள் நடமாடி வருகின்றன. இந்த கிசுகிசுக்களை இருவருமே ரசித்து வந்தனர்.

இந்நிலையில் தனக்கு திருமணம் என்று நடந்தால் அது நடிகர் சங்கக்கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டபிறகுதான் என்று சூளுரைத்திருந்தார் விஷால். அவரது சபதம் நெருங்கிவரும் வகையில், நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர்.

மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.

இச்செய்தியை அவரது தந்தை ஜீ.கே.ரெட்டி உறுதி செய்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?