’இந்த அய்யருங்க இருக்கானுங்களே என்ன திமிர் புடிச்சவனுங்க’...கோபத்தில் அஜீத்,ரஜினியை தூக்கி அடிச்ச கஸ்தூரி...

Published : Dec 31, 2018, 09:09 AM ISTUpdated : Dec 31, 2018, 09:17 AM IST
’இந்த அய்யருங்க இருக்கானுங்களே என்ன திமிர் புடிச்சவனுங்க’...கோபத்தில் அஜீத்,ரஜினியை தூக்கி அடிச்ச கஸ்தூரி...

சுருக்கம்

வாக்-இன் இண்டர்வியூக்கு பிராமணர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டிருக்கும் அவரை, ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’  ட்ரெயிலர்களில் கொலவெறி கோபத்துடன் அலையும் அஜீத்,ரஜினியை விட அதிக  கோபத்தில் இருக்கும்  அக்கா கஸ்தூரி வறுத்தெடுத்திருக்கும் பதிவைப் படியுங்கள்...

செய்தியாளர்கள் இந்த புத்தாண்டு சபதங்களில் நடிகை கஸ்தூரி பற்றி ஒரு மாதத்துக்கு செய்தி எதுவும் போடுவதில்லை என்று ஒரு சபதம் எடுத்துப் பாருங்கள். உங்களால் ஒருநாள் கூட தாக்குப் பிடிக்கமுடியாது.

ஏனெனில் தொடர்ந்து அப்படிப்பட்ட காண்ட்ரவர்சிகளை கியூ கட்டி அனுப்பி வைக்கிறார். இன்றைக்கு அம்மணியிடம் சிக்கியிருப்பவர் ஒரு பிராமண பிரியர். கஸ்தூரியின் பாஷையில் பிராமண வெறியர்.

வாக்-இன் இண்டர்வியூக்கு பிராமணர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்டிருக்கும் அவரை, ‘விஸ்வாசம்’, ‘பேட்ட’  ட்ரெயிலர்களில் கொலவெறி கோபத்துடன் அலையும் அஜீத்,ரஜினியை விட அதிக  கோபத்தில் இருக்கும்  அக்கா கஸ்தூரி வறுத்தெடுத்திருக்கும் பதிவைப் படியுங்கள்...

...பொதுவாக என் சமூகவலையில் ஜாதி பேசக்கூடாது என்று நினைப்பவள் நான், ஆனால் சில விஷயங்களை கண்டிப்பாக கடந்துபோக கூடாது.
இன்று இந்த விளம்பரத்தை பார்த்து வாயடைத்து போனேன். இந்த அய்யருங்க இருக்காங்களே, என்ன திமிர் இருக்கவேண்டும்! என்று ஆத்திரமும் அருவருப்பும் வந்தது. இந்த நிறுவனத்தை நடத்தும் அந்த சாதி வெறி பிடித்த ப்ராஹ்மணர்கள் யார் என்று கொஞ்சம் ஆராய்ந்தால், அதிர்ச்சி ! நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராஜஸ்தானிய ஜாங்கிட் ( விஸ்வகர்மா, அதாவது தச்சர் ) குலத்தினர். தமிழும் இல்லை, அய்யரும் இல்லை ! அட ராமா !

நான் இப்போ என்ன செய்வது? அய்யருங்களை சந்தேகப்பட்ட என் அவசரபுத்தியை நினைத்து வெட்கப்படுவதா? இல்லை என்னை போல் அவசரக்காரர்கள் ஏராளமானோர் இங்குண்டு என்பதை நினைத்து அழுவதா சிரிப்பதா?

இதோடு என் ஆராய்ச்சி முடியவில்லை. வேலைவாய்ப்பில் ஜாதி பாகுபாடு பார்ப்பது சட்டப்படி குற்றமாயிற்றே, இதற்கு விளம்பரம் கொடுத்த அறிவாளிகளுக்கும், பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிட்ட நாளிதழுக்கும் என்ன தண்டனை என்று தேடினேன்- அரசு வேலையில் ஜாதி பார்த்தல் குற்றம் என்பது சட்டம், தனியார் நிறுவனத்துக்கு அப்படி எந்த விதியும் இல்லை !

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Idhayam Murali Review : இதயம் தொட்டதா? இரிடேட் பண்ணியதா? இதயம் முரளி விமர்சனம்
Velpari Movie : ஷங்கரின் வேள்பாரியில் சூர்யாவா? தனுஷா? யார் ஹீரோ?