ஆர்யாவை தொடர்ந்து சின்னத்திரைக்கு வரும் விஷால்...!

 
Published : May 24, 2018, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
ஆர்யாவை தொடர்ந்து சின்னத்திரைக்கு வரும் விஷால்...!

சுருக்கம்

vishal enter in tv show

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் பிரபலமானவர்கள், சின்னத்திரையில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை நடிகர்களை கூட வெள்ளித்தை நடிகர்களுக்கு நிகராக தான் பார்க்கின்றனர் ரசிகர்கள். 

அதனால் வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் சின்னத்திரையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். 

இந்நிலையில் இவரை தொடர்ந்து இவருடைய நெருங்கிய நண்பர் விஷாலும் சின்னத்திரையில் கால் பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

தெலுங்கில் முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'மேது சைத்தான்'. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாக வருகிறது. இதனை பிரபல நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் வாழ்க்கையில் போராடி ஜெயித்த மக்களின் கதை நேர்காணலாக ஒளிபரப்பாகும். பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் சாதரண மக்கள் போலவும், கூலி வேலை செய்வார்கள்.

தற்போது இந்த நிகழ்ச்சியை தமிழின் முன்னணி சேனல் தயாரிக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடந்தி வருகிறது அந்த தொலைக்காட்சி நிறுவனம். விரைவில் இதற்காண ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.  இதுக்குறித்து பேசிய விஷால், ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் இன்னும் முடிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?