சுட்டு கொன்ற நிஜ போலிசை விட்டுட்டு...! டம்மி போலீஸ்... நடிகை நிலானி மீது இத்தனை பிரிவில் வழக்கு...?

 
Published : May 24, 2018, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
சுட்டு கொன்ற நிஜ போலிசை விட்டுட்டு...! டம்மி போலீஸ்... நடிகை நிலானி மீது இத்தனை பிரிவில் வழக்கு...?

சுருக்கம்

police filed the complient for serial actress nilaani

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சீரியல் நடிகை நிலானி நிலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்றல், பிரியமானவளே, உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், சீரியல் படப்பிடிப்பின் போது, போலீஸ் உடையில் இருந்தப்படி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இதில் நிலானி, மிகவும் ஆவேசமாக நம் நாட்டில் நடக்கும் சம்பவங்களை நினைத்தால் வேதனையாக உள்ளது. இதுவரை 10பேர் இறந்துள்ளனர். அமைதி வழியில் போராடுகிறோம் எனினும் பலனில்லை. 

நான் படப்பிடிப்பில் தற்போது இருக்கிறேன், இல்லாவிட்டால் தூத்துக்குடி சென்று போராட்டத்தில் பங்கேற்றிருப்பேன் என்று கூறினார்.

மேலும் காவல் துறை உடை அணிந்து இருப்பதற்காக வெட்கப்படுவதாகவும், தமிழர்களை தீவிரவாதிகள் போல் சுட்டுக்கொன்றுள்ளனர். இலங்கையை போல் தமிழத்திலும் தமிழர்களை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் என மிகவும் ஆவேசமாக பல கேள்விகளை எழுப்பினார்.

போலீஸ் வழக்கு பதிவு:

இந்நிலையில் அவரது இந்த வீடியோ பதிவு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி. சீரியல் நடிகை நிலானி மீது ரிஷி என்பவர் வடபழனி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடித்தி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி