’குத்துங்க எசமான் குத்துங்க’ METOO' விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கிறாராம் விஷால்

Published : Oct 14, 2018, 03:01 PM IST
’குத்துங்க எசமான் குத்துங்க’ METOO' விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கிறாராம் விஷால்

சுருக்கம்

METOO' விவகாரம் நாளுக்கு நாள் ஜெட் வேகம் எடுத்து வருகிறது. இது தொடர்ந்து வலைதளங்களில் ஓவர் நாற்றம் வருவதற்குள் weThree என்ற அமைப்பை ஏற்படுத்தி நமக்கு நாமே பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார் தமிழ்த் திரையுலகின் லேட்டஸ்ட் நாட்டாமை விஷால்.

இன்று வைரமுத்து தன் திருவாயை திறப்பதற்கு சற்றுமுன்னதாக மிடு’ விவகாரம் குறித்து பேசிய விஷால், ‘இன்றைய தேதியில் எங்கு சென்றாலும் எடுத்தவுடம் மி டு’ விவகாரம் குறித்துதான் கேள்வின் எழுப்புகிறார்கள். மீடியாக்காரகளுக்கு இச்செய்தி பரபரப்பானது என்பதால் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள்.

இந்நிலை நீடித்தால் சினிமா பிரபலங்கள் யாரும் வெளியே தலைகாட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே மிக அவசரமாக ஒரு கூட்டம் கூட்டி, மி டு’ விவகாரம் குறித்து விசாரிக்க மூன்றுபேர் தலைமையில் ஒரு குழு அமைக்கவேண்டும்’ என்று பதட்டப்படுகிறார் விஷால்.

அந்தக்குழுவுக்கு
 1. நீதியரசர் சிம்பு
2. நீதியரசர் தனுஷ்
3. இசைப்பேரரசு அனிருத்

 ஆகிய மூனு பேரை  பொறுப்பாளர்களா நியமிச்சுடலாமுங்களா எஜமான் என்று நக்கலாக கமெண்டுகள் வருகின்றன. குத்துங்க எசமான் குத்துங்க.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?