அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டி வைத்திருக்கிறேன்... வழக்கை சந்திக்க ரெடி!! வைரமுத்து தில் பேச்சு

Published : Oct 14, 2018, 02:09 PM ISTUpdated : Oct 14, 2018, 02:13 PM IST
அசைக்க முடியாத ஆதாரங்களை திரட்டி வைத்திருக்கிறேன்... வழக்கை சந்திக்க ரெடி!! வைரமுத்து தில் பேச்சு

சுருக்கம்

அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. தன் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானது என வைரமுத்து முதல்முறையாக வாய்திறந்து பேசியுள்ளார்.

அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. தன் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானது என வைரமுத்து முதல்முறையாக வாய்திறந்து பேசியுள்ளார். 

வைரமுத்து மீது பிரபல பின்னணிப் பாடகி வெளியிட்ட செக்ஸ் குற்றச்சாட்டு நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தொடர்ந்து தனக்கு வரும் ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார்.

இதில், 18 வயது இருக்கும் போது பயிற்சிக்காக வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற போது அவர் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் மற்றும் மற்றொரு பெண்ணும் ஏற்கனவே கூறியிருந்த புகார் தமிழ்  சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தன்மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் உள்நோக்கம் கொண்டவை எனவும் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடுக்கலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கை சந்திக்க தாம் காத்திருப்பதாக வைரமுத்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளார்.

மேலும், கடந்த ஒருவாரமாக வழக்கறிஞர்கள் மற்றும் அறிவுலக ஆன்றோர்களுடன் ஆலோசித்தேன் என்றும் கூறியுள்ளார். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்துள்ளாக வைரமுத்து அறிவித்துள்ளார். நான் நல்லவனா , கெட்டவனா என்று தற்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம் என்றும் இந்த வீடியோவில் கூறியுள்ளார். நீதிமன்றம் சொல்லட்டும் நீமிக்கு தலைவணங்குகிறேன் என வைரமுத்து விளக்கமளித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Disha Patani : ஓவர் கவர்ச்சியில் அட்ராசிட்டி.. திஷா பதானியின் தாறுமாறான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Malavika Mohanan : புடவையில் ஆளை மயக்கும் மாளவிகா மோகனன்.. இவ்வளவு அழகா இருக்க முடியுமா? வைரல் போட்டோஸ்!