
’நாடாளுமன்றத் தேர்தல் பத்தி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ஆனா 21 தொகுதிக்கு இடைத்தேர்தல் வர்றப்ப சும்மா இருக்கமாட்டான் இந்த விஷால்’ என்று மறுபடியும் மார்தட்ட ஆரம்பித்திருக்கிறார் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விஷால்.
‘அயோக்யா’ படத்தின் பிசி ஷூட்டிங்,தொடர்ந்து விரட்டும் தயாரிப்பாளர் சங்கப்பஞ்சாயத்துகள், இன்னொரு பக்கம் திருமண ஏற்பாடு என்று எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் அரசியல் ஆர்வத்தை மடியில் கட்டிக்கொண்டே அலைபவர்தான் விஷால்.
வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அயோக்யா'. ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கு இடையே சென்னை ஜுவல்லரி மற்றும் ஜெம் சங்கத்தின் சார்பில் நடைபெறும் நகைக் கண்காட்சியை விஷால் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவிக்கட்டும். அதே போல், இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக்கிட்டே இருக்கோம். நாடாளுமன்றத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை தேர்தல் அறிவித்தபிறகு முடிவு செய்வோம். ஆனால் இடைத்தேர்தலில் நிச்சயம் நான் போட்டியிடுவேன். கண்டிப்பாக இந்த இரு தேர்தல்களுமே ரொம்ப முக்கியமான தேர்தல்களாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்து தான்’ என்கிறார் விஷால்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.