
திரைப்படம் நடிப்பது மட்டும் இன்றி மற்ற வேலைகளிலும், நயன் மற்றும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது ஏதேனும் இன்ப அதிர்ச்சி கொடுத்து இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை நிரூபித்து வருகிறார்கள்.
நயன்தாராவிற்கு ஷூட்டிங் இல்லாத போது வெளிநாட்டிற்கு சென்று, காதல் பறவைகளாக சிறகடித்து பறக்கின்றனர். காதல் இருவருக்கு இடையேயும் ஸ்டராங்காக இருந்தாலும், கல்யாணம் மட்டும் இப்போது வேண்டாம் என பிடிவாதமாக இருக்கிறாராம் நயன்தாரா.
இந்நிலையில் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் பெண்களை பெருமைப்படுத்தும் விதத்தில் பேசிவருகின்றனர்.
அதே போல் தன்னுடைய காதலி நயன்தாராவிற்கு அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ப அதிர்ச்சி கொடுத்து அதன் புகைப்படத்தையும் வெளில்யிட்டுள்ளார். இந்த நாளை மேலும் சிறப்பாக்க நயன்தாராவிற்கு பிடித்த பல வண்ண பூக்களை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
மேலும் நயன் புகைப்படத்தோடு "நீ என் உலக அழகியே.. உனை போல இல்லை ஒருத்தியே" என காதல் வரிகளை வாரி இறைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.