
வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த, பிரபல கர்நாடக வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன்(92) வயதில் காலமானார்.
கேரள மாநிலம் திருப்பூணித்துறையை பூர்வீகமாக கொண்ட டி.என்.கிருஷ்ணன், தன்னுடைய இளம் வயதிலேயே... பெற்றோருடன் சென்னையில் குடியேறியவர். இசை மீது ஆர்வம் கொண்ட இவர், செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யரிடம் இசைப் பயிற்சி பெற்றார்.
பின்னர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எம்.டி.ராமநாதன், உள்ளிட்ட பலரிடம் வயலின் வாசித்தார். தனியாக இசை கச்சேரிகளையும் நடத்தியுள்ளார். இவரின் வயலின் இசையை கேட்க பல ரசிகர்கள் உள்ளனர். சென்னை இசைக் கல்லூரியில் சில காலம் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் கலைப் பள்ளியின் முதல்வராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1992ஆம் ஆண்டு மத்திய அரசின் "பத்மவிபூஷண்' விருது பெற்ற இவர், 2006-ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதெமி விருதுதையும் பெற்றார்.
இந்த நிலையில் 92 வயதான டி.என். கிருஷ்ணன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதி பட்டு வந்த நிலையில் நேற்று காலமானார். இவருக்கு இசை துறையை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.