“என்ன ஜப்பான் பொம்ம மாதிரி இருக்க”... ஷிவானியை கிண்டல் செய்த பாலாஜி... அதுக்கு ஆஜித் அடிச்ச கமெண்ட் இருக்கே?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 02, 2020, 06:57 PM IST
“என்ன ஜப்பான் பொம்ம மாதிரி இருக்க”... ஷிவானியை கிண்டல் செய்த பாலாஜி... அதுக்கு ஆஜித் அடிச்ச கமெண்ட்  இருக்கே?

சுருக்கம்

இதனிடையே சற்று நேரத்திற்கு முன்பு அன் சீன் வீடியோ ஒன்றில், சமையலறை மேடை மீது அமர்ந்து சுசித்ரா, ஆஜித், பாலாஜி 3 பேரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அம்மா - பிள்ளை, அக்கா - தம்பி, தாத்தா - பேத்தி என சகல விதமான சென்டிமேண்டுடன் சண்டை, கோபம், அழுகை என பலவகையான உணர்வுகள் காட்டப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு சீசன்களைப் போல் காதல் என்பது மட்டுமே மிஸ்ஸிங் என ரசிகர்கள் வலைவீசி தேடி வந்த நிலையில், தற்போது ஷிவானி - பாலாஜியை வைத்து காதல் ட்ராக் ஓட ஆரம்பித்திருக்கிறது. 

தங்கம் சேகரிக்கும் டாஸ்க்கின் போது பாலாஜியின் தங்கத்தை ஷிவானி பாதுக்காத்த போதே இருவர்களுக்குள்ளும் ஏதோ சம்திங், சம்திங் என ரசிகர்கள் முணு முணுக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் அம்மி அரைக்க வைக்கிறேன் மேட்டரின் போது பாலாஜிக்கு எதிராக ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் ரவுண்ட் கட்டியதால், பச்சை பிள்ளை போல் கதறி அழுதவருக்கு ஷிவானி தான் ஆறுதல் கூறினார். இப்படி அரசரல் புரசலாக இருவருக்கும் இடையே ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது என்பது காண்பிக்கப்படுகிறது. 

 

இதையும் படிங்க: காதல் மனைவியுடன் கருணாஸ் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்... கறுப்பு உடையில் கலக்கல் கிளிக்ஸ்...!

இதனிடையே சற்று நேரத்திற்கு முன்பு அன் சீன் வீடியோ ஒன்றில், சமையலறை மேடை மீது அமர்ந்து சுசித்ரா, ஆஜித், பாலாஜி 3 பேரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது தலைவர் தேர்வை பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென சமையலறைக்குள் நுழையும் ஷிவானியை பார்த்து, ஏய்...! என்ன ஜப்பான் பொம்மை மாதிரி இருக்க என பாலாஜி கிண்டல் செய்ய, ஷிவானியோ எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு செல்கிறார். அதற்கு ஆஜித் சிரித்துக்கொண்டே எல்லா ட்ராக்கும் காட்டுறீங்க போல இருக்கே என கிண்டல் அடிக்கிறார். அப்போது பாலாஜி முகத்தை பார்க்கணுமே?.... இதோ அந்த வீடியோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!