சப் -இன்ஸ்பெக்டராக வாழ்க்கையை ஆரம்பித்து... நடிகனாக மறைந்த வினு சக்ரவர்த்தி...

 
Published : Apr 28, 2017, 11:50 AM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
சப் -இன்ஸ்பெக்டராக வாழ்க்கையை ஆரம்பித்து... நடிகனாக மறைந்த வினு சக்ரவர்த்தி...

சுருக்கம்

vinichakravarthy memories

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (72) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை  ஆரம்பித்து,  பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படம் மூலம் திரைக்கதை  எழுதி நடிகராக  தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 'வண்டி சக்கரம் ','கோயில் புறா','இமைகள்', 'பொண்ணுக்கேத்த புருஷன் ' ஆகிய படங்களுக்கு கதை-திரைக்கதை, வசனம் எழுதி துணை இயக்குனராகவும்  பணி புரிந்தார். 

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், படுகா,இந்தி,ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா. 

தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த இவர் நேற்று  இரவு 7 மணி அளவில் காலமானதை அறிந்து திரையுலகினர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.அவரின்  ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நியூஸ் பாஸ்டின் சார்பாக அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!