பொங்கலுக்கு தயாராகும் விமலின் "மன்னர் வகையறா"!

 
Published : Oct 25, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
பொங்கலுக்கு தயாராகும் விமலின் "மன்னர் வகையறா"!

சுருக்கம்

vimal produced mannar vagaiyaraa release in pongal

விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரோபோ சங்கருடன் விமல் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது படத்தின் ஹைலைட்டாக இருக்கும். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். 

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் நவ-8ஆம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

வரப்போகின்ற புது வருடத்தில் வெளியாகும் ‘மன்னர் வகையறா’ விமலின் திரையுலக பயணத்திற்கு புதிய பாதை போட்டுத்தரும் என்பதில் சந்தேகமே இல்லை. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!