
ரஜினி, விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்திருப்பவர் சம்பத் ராம். ‘தட்றோம் தூக்குறோம்’, ‘காஞ்சனா 3’ உள்ளிட்ட பல படங்கள் சம்பத் ராம் நடிப்பில் வெளியாக உள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில், ராணா நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் சம்பத் ராம் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில், சம்பத் ராம், ஹீரோ ராணாவுடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட இருந்தது. முன்னதாக சண்டைக்காட்சிக்கான ஒத்திகையில் சம்பத் ராம் ஈடுபட்ட போது, எதிர்பாரத விதமாக அவர் நெத்தியில் அடிபட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்புக் குழுவினர் அவருக்கு முதலுதவி செய்ய, சம்பத் ராமும் அப்போதைக்கு சமாளித்துக் கொண்டு தனது போஷனை முடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், நெத்தியில் அடிபட்டு சுமார் 15 நாட்களுக்கு பிறகு சம்பத் ராமுக்கு, மயக்கம், தலை சுற்றல் ஏற்பட, அதனை தொடர்ந்து மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றவருக்கு தனது தலையில் இரத்தம் கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டு, ஊசி மூலம் தலையில் ஏற்பட்ட இரத்த உறைதலை சரி செய்துள்ளார்கள்.
தற்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ள சம்பத் ராம், இன்னும் சில தினங்களில் எப்போதும் போல படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்ள இருக்கிறார். அதேபோல், பிரபு சாலமன் படத்திலும் இவருக்கான போர்ஷன் இன்னும் இருப்பதால், அப்படத்தின் படப்பிடிப்பிலும் விரைவில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.