பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொங்கல் செலிபிரேஷன் தற்போது நடந்து வரும் நிலையில், தொகுப்பாளினி டிடிக்கு பொங்கல் பண்டிகை அன்று தான் தமிழ்நாடு என பெயர் வந்ததாக கூறியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக, விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. இதில் அநேகமாக விக்ரமன், ஷிவின், மற்றும் அசீம் ஆகியோர் வெற்றியாளர்களாக இருக்கலாம் என நெட்டிசன்கள் கணித்து கூறி வருகிறார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிக்பாஸ் வீட்டிற்குள் அதிரடியாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மற்றும் சில சிறப்பு விருந்தினர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். அவ்வபோது இது குறித்த புரோமோக்களும் வெளியாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்
மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் நீண்ட நாட்களுக்கு பின்னர், எவ்வித சண்டை சச்சரவுகள் இன்றி... அனைத்து போட்டியாளர்களும் ஆனந்தமாக பேசி கொண்டு, மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி, பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினராக சென்றுள்ள நிலையில், அவரிடம் விக்ரமன் பொங்கல் அன்று தமிழ்நாட்டிற்கு எப்படி தமிழ்நாடு என்கிற பெயர் வந்தது என்பது குறித்து பேசி உள்ளார். இதுகுறித்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
'RRR' படம் பார்த்த இரண்டு முறை ஜேம்ஸ் கேமரூன்..! ராஜமௌலி என்ன சொன்னார் தெரியுமா? வைரல் பதிவு!
கடந்த சில நாட்களாகவே தமிழ் நாட்டுக்கு, தமிழகம் என்கிற பெயர் தான் பொருத்தமாக இருக்கும் என ஆளுநர் கூறியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும், எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாமலேயே... தமிழ்நாடு குறித்து விக்ரமன் பேசியிருப்பது தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேபோல் இதை தெரிஞ்சு சொல்றீங்களா தெரியாம சொல்றீங்களா? என டிடியும் பாலிஷுடாக வெளியில் நடக்கும் பிரச்சனை குறித்து தெரிவிக்காமல் பேசியுள்ளார்.
இந்த வீடியோவில்... விக்ரமன் கூறியுள்ளதாவது, இன்றைய நாள் பொங்கல் மட்டுமல்ல நம்முடைய மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்த நாள். இதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த நிலையில், ஐயா சங்கரலிங்கனார் என்பவர், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் இறந்த பின்னர் அண்ணா நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைத்தார். எனவே இந்நாளில் நம் நாட்டுக்காக போராடிய அனைவருக்கும் நாம் மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாளை கொண்டாடுகிறோம் என தெரிவித்துள்ளார்.
இதற்க்கு டிடி-யும், தமிழ்நாடு என்பது தமிழ்நாடு தான் இதற்கு வேறு எந்த பெயரும் சரியாக இருக்காது அல்லவா? என்று கேட்க, ஆமாம் தமிழ்நாடு என்றால் தமிழ்நாடு மட்டும்தான் என விக்ரம் சொல்கிறார். அதன் பிறகு டிடி நான் இப்படி உங்களை சொல்ல வைத்ததில் ஒரு விஷயம் இருக்கிறது. அது இப்போது உங்களுக்கு புரியவில்லை என்றாலும், நீங்கள் வெளியே வந்தவுடன் புரியும் என கூறுகிறார்.
இதைத் தொடர்ந்து பேசிய விக்ரமன், தமிழ்நாட்டை பிரிப்பதற்கு ஏற்கனவே சில முயற்சி செய்தனர் கொங்குநாடு, உள்ளிட்ட சில பிரிவுகளாக பிரிக்க முயற்சித்தார்கள், அப்போது நான் நீங்கள் இப்படி பேசிக் கொண்டிருந்தால் இதை நாங்கள் பெரியார் நாடு என்று அழைப்போம் என்று கூறினேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் எந்த பெயரும் தமிழ்நாடுக்கு ஈடாகாது என அவர் பேசியுள்ள இந்த வீடியோ தான் சமூக வலைதளத்தில் வைரலாகி விக்ரமனை பாராட்டு மழையில் நனைய வைத்துள்ளது.
This is Vikraman!!!
I hope you got the answer for the question "why he differs from all HMS"❤️❤️ pic.twitter.com/Q5ydSAtUub