ஒரே நேரத்தில் தல, தளபதியின் படங்களுக்கு இசையமைக்கிறார் விக்ரம் வேதா இசையமைப்பாளர்…

 
Published : Nov 02, 2017, 11:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
ஒரே நேரத்தில் தல, தளபதியின் படங்களுக்கு இசையமைக்கிறார் விக்ரம் வேதா இசையமைப்பாளர்…

சுருக்கம்

Vikram Veda composer music to thala thalapathi films

அஜீத், விஜய் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை இளம் இசையமைப்பாளரான சாம் சி.எஸ் பெற்றுள்ளார்.

அஜீத் மற்றும் சிவா இணையும் ‘தல 58’ படத்திற்கும், விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் ‘தளபதி 62’ படத்திற்கும் இளம் இசையமைப்பாளரான் சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.

இந்த இரண்டு படங்களும் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும்  நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைக்க இளம் இசையமைப்பாளரான சாம் சிஎஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இவர் சமீபத்தில் இசையமைத்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ஒரே நேரத்தில் தல, தளபதி என இரண்டு பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு தேடி வந்துள்ளது.

ஏற்கனவே இவர் கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் நடித்து வரும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தல, தளபதி படங்களுக்கு இசையமைப்பது உறுதியானால் அவர் கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பட்டியலில் இணைந்துவிடுவது உறுதி.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!