
நடிகர் விக்ரமின் மகன் துருவ் காரில் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆட்டோக்களில் மோதியதில் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் மூலம் அறிமுகமாக உள்ளார். வர்மா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்கிவருகிறார்.
இந்நிலையில், துருவ் தனது நண்பர்கள் மூவருடன் மாருதி சுசுகி பலேனோ காரில் சென்றுகொண்டிருந்தார். அதிவேகமாக சென்ற கார், சென்னை தேனாம்பேட்டையில் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் வீட்டின் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆட்டோக்களின் மீது மோதியது.
இதில் மூன்று ஆட்டோக்கள் கடும் சேதமடைந்தன. ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு கால் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரை துருவ் விக்ரம் ஓட்டியது தெரியவந்துள்ள. இதுதொடர்பாக அடையார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னையில் நடிகர்கள் அதிவேகமாக காரை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தும் சம்பவம் தொடர்ந்து நடந்துவருகிறது. இதற்கு முன் நடிகர் ஜெய் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியது. நள்ளிரவில் பார்ட்டிக்கு சென்றுவிட்டு அதிகாலையில் பிரபலங்களின் கார் விபத்தை ஏற்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ஓட்டிச்சென்ற கார் சாலையோரம் நின்ற ஆட்டோ மீது விபத்தை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல அருண் விஜயும் ஒரு விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பிரபலங்கள் நள்ளிரவிலோ அதிகாலையிலோ விபத்தை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.